மதுராந்தகத்தில் நடை மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றம்

78பார்த்தது
மதுராந்தகம் அருகே நடை மேம்பாலம் அகற்றும் பணியில் ஈடுபட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோச்சேரி கிராமத்திற்கு கிராம மக்கள் சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மதுராந்தகம் To மோச்சேரி செல்ல நடை மேம்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு அவர்களின் நிதியிலிருந்து நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நடை மேம்பாலம் சேதமடைந்து தற்பொழுது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த நடைமேடை மேம்பாலத்தினை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்
அந்தக் கோரிக்கையின் அடிப்படையில் தற்பொழுது இந்த நடை மேம்பாலத்தினை
நெடுஞ்சாலைத்துறையினர் தற்பொழுது அகற்றி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி