சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது மூளையின் செயல் திறனை மேம்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. மதிய நேரத்தில் 30 முதல் 60 நிமிடம் சிறிய தூக்கம் போடுபவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிப்பதாகவும், பல விஷயங்களை எளிதில் ஞாபகம் வைக்கும் திறன் மேம்படுவதாகவும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் 2 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது இரவு தூக்கத்தை கெடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.