மதுராந்தகம் - Mathuranthakam

மதுராந்தகத்தில் இரும்பு லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து விருதாச்சலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து கருங்குழி பேரூராட்சி அலுவலகம் எதிரே கம்பியை ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி அரசுப் பேருந்து நடத்துனர் கம்பி குத்தி காயமடைந்தார். மேலும் இரண்டு பயணிகளும் சிறு காயம் அடைந்தனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.  இந்த சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கருங்குழி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ஹார்டுவேர்ஸ் கடைக்கு தினம்தோறும் இரவு நேரங்களில் கம்பியை இறக்கிவிட்டு பேரூராட்சி அருகாமையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా