தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவு வாயிலான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி பொதுமக்கள் சென்ற நிலையில் நாளை பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட உள்ளதால் விடுமுறை நாட்களை கழிக்க தென் மாவட்டங்கள் நோக்கிச் சென்ற பொதுமக்கள் இரவு நேரங்களில் சென்னையை நோக்கி படையெடுப்பதால் சென்னை புறநகர் பகுதிகளாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நுழைவு வாயில் பகுதியாக உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது. இந்த கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலால் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றனர்.