காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று
காஷ்மீர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதை எதிர்த்த பாஜகவினருக்கும்
பிடிபி கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். தீர்மான நகலை பாஜக எம்எல்ஏக்கள் கிழித்துப் போட்டதால் மோதல் ஏற்பட்டது. அவைக்காவலர்கள் பாஜக எம்எல்ஏக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.