அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், விழுப்புரம் ரோஷணை போலீசில், ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக தன் மீது அவதூறு பரப்பிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது நடவடிக்கை புகார் அளித்தார். உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற ரவீந்திரன், நேற்று திண்டிவனம் மாஜிஸ்திரேட் கமலா முன் ஆஜரானார். தினசரி காலை 10:30 மணிக்கு ரோஷணை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.