சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 9ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். ரேஷன் கடைகளுக்கு நேரில் வர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.