காஞ்சிபுரம் நகரம் - Kanchipuram City

காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்தில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை, மாணவ- - மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, கலெக்டர் கலைச்செல்வி கையெழுத்திட்டு துவக்கி வைத்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை, ஆட்டோவில் ஒட்டினார். இதைத் தொடர்ந்து, உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியையும், கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், துணை இயக்குநர் செந்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ- - மாணவியர் பங்கேற்றனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా