செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே மெல்ரோசாபுரம் பகுதியில் அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக லாரி சிங்கபெருமாள்கோவில் அருகே மெல்ரோசாபுரம் பகுதியில் அதிவேகமாக வந்த கனரக லாரி சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ, இரண்டுகள் கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சிங்கபெருமாள்கோவில் வழியாக மெல்ரோசாபுரம் தனியார் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த வேன், சிக்னலில் நின்று கொண்டிருந்த ஆட்டோ, இரண்டு கார்கள் ஆகியவை விபத்தில் சிக்கின. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்தில் காயமடைந்த ஐந்து பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது. இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கிய கனரக லாரி, ஆட்டோர், வேன், இரண்டு கார்கள் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர் செங்கல்பட்டு அருகே அடுத்தடுத்து ஐந்து வாகங்கள் மோதி விபத்துக்குள்ளானதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.