தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் டாக்டர் மா. சுப்பையின் கூறுகையில்: கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வர் அறிவித்த திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் இந்த மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகத்தில் மற்ற இடங்களில் வாங்குவது போல் அதிக விலை இல்லை, நூறு சதவீதம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.
உதாரணத்திற்கு எம்.ஆர்.பி. படி ஒரு மாத்திரையின் விலை வெளியில் 100 ரூபாய் என்றால், முதல்வர் மருந்தகத்தில் அந்த மாத்திரையின் விலை வெறும் 20 ரூபாய் மட்டுமே. செங்கல்பட்டு மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் 25 மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்) உள்ளன. இவைகளுக்கான கிடங்கு (குடோன்) செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துகடைகளுக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும். தற்போது 25 கடைகளாக உள்ள மருந்தகங்கள் எதிர்காலத்தில் இவை விரிவுபடுத்தப்படும். இதனால் மாவட்டத்தில் ஆயிரம் முதல் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற அரசு மருந்தகங்கள் நடத்துவதற்கு தனிநபர்கள் கேட்டால் அவர்களுக்கும் நாங்கள் அனுமதி வழங்குகிறோம். எதிர்காலத்தில் வீடுகளுக்கே சென்று இலவசமாக மருந்துகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.