செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் எலப்பாக்கம், எல் எண்டத்தூர்ண, மொறப்பாக்கம், வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜி. தம்பு அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம் எல் ஏ, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம். டி. ஆர். சாரதி மணிமாறன் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.