நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா சென்னை விமான நிலையத்தில் பேட்டி: -உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ் ஆன் ஜீயில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா விமான மூலம் சென்னை வந்தடைந்தார்.
இப்போது விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர்: -நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் சார்பாக போட்டி நடைபெற்றது. இதில் உலக சாம்பியன்கள் பலரும் விளையாடி உள்ளனர். இதில் வெற்றி பெற்றது ரொம்ப பெருமையாக உள்ளது. கடந்த வருடம் சரியாக விளையாடவில்லை. 2025 ஆம் ஆண்டு முதல் போட்டியிலேயே முதலில் வந்து வெற்றி அடைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. 2025 நிறைய போட்டிகள் நடைபெற உள்ளது. உலக கோப்பை போட்டியில் உள்ளது. உற்சாகமான ஆண்டாக இந்த வருடம் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.