செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கிளாம்பாக்கம் அருகே புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்கபட்டதாக கூறப்படுகிறது.
அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
முறையாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அவரிடம் அனுமதி பெற்று திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கமாக டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டால் அதன் அருகாமையில் உள்ள குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு போராட்டம் நடத்துவார்கள்.
ஆனால் மாறுதலாக சென்னையில் இருந்து அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா போராட்டத்திற்கு காரில் வந்து இறங்கினார்.
அதுமட்டுமில்லாமல் ராஜேஸ்வரி பிரியா வரும்போது மூன்று வாகனங்கள் முழுவதும் பெண்களை கொண்டு வந்து இறங்கினார்.
வாகனங்களில் இருந்து இறங்கிய பெண்கள் ஊரப்பாக்கம் காரனை புதுச்சேரி என தெரிவித்தனர்.
இறங்கிய பெண்கள் கைகளில் டாஸ்மார்க் மூட வேண்டும் என பதாகைகளை கையில் வைத்துக்கொண்டு ராஜேஸ்வரி பிரியா தலைமையில் டாஸ்மார்க் கடை நோக்கி நடந்து வந்தனர்.
அப்பொழுது ராஜேஸ்வரி பிரியா டாஸ்மார்க் கடையை திறப்பதற்கு யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது,
கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் தனியார் பள்ளி அருகே உள்ளது. இந்த இடத்தில் டாஸ்மாக் திறப்பதற்கு அவசியம் என்ன. இதுதான் மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரும் அரசின் லட்சணமா என கேள்வி எழுப்பினர்.