புதுப்பட்டினம் பள்ளிவாசலில் 76 ஆவது குடியரசு தின விழா

69பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் ஹஜ்ரத் பிலால் ஜாமிஆ பள்ளிவாசலில் ஆண்டுதோறும் குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோன்று இன்றைய தினம் 76வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளிவாசல் முகப்பில் பள்ளிவாசல் ஜமாத்தார் மற்றும் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து 76வது குடியரசு தினத்தை குறித்து சிறப்புரையாற்றி, தேசிய கொடியை ஏற்றிவைத்தும், ஒற்றுமையையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக சமாதான புறாவை பறக்கவிட்டும் குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடினர். தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வந்திருந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி