சதுரங்கப்பட்டினத்தில் வன்னியர் சங்க தலைவர் ஜெ. குருவின் பிறந்தநாளில் பாமக மற்றும் வன்னியர் சங்க கொடியிணை ஏற்றி அன்னதானம் வழங்கிய பாமகவினர். பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மத்திய மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சதுரங்கப்பட்டினத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மறைந்த ஜெ. குருவின் பிறந்தநாளில் சதுரங்கப்பட்டினம் கோட்டை அருகே பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட துணை செயலாளர் எஸ். டி. சுந்தரமூர்த்தி தலைமையில் கொடியேற்றி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வன்னியர் சங்க கொடியையும், பாமக கொடியையும் ஏற்றி வைத்து மறைந்த குருவின் திருவுருவ படத்திற்கு கற்பூரம் தீபம் ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி. ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் சோலை த. முனுசாமி, நிர்வாகிகள் சங்கர், பாஸ்கர், ரமேஷ், மணி, வார்டு உறுப்பினர்கள் ராமு, உதயா உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.