பேரறிஞர் அண்ணா நினைவு தின பொது விருந்து நிகழ்ச்சி - செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், நகர்மன்ற தலைவர் ஆகியோர் பங்கேற்பு.செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள இந்து அறநிலைத்துறைக்குச் சொந்தமான ஓம் சக்தி விநாயகர் திருக்கோவிலில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு தினத்தை ஒட்டி சிறப்பு பூஜை மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மற்றும் செங்கல்பட்டு நகர்மன்ற உறுப்பினர் தேன்மொழி நரேந்திரன் ஆகியோர்கள் பொது விருந்தில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறி பின்னர் மக்களுடன் மக்களாக அமர்ந்து உணவருந்தினர். இந்நிகழ்வின்போது ஓம் சக்தி விநாயகர் திருக்கோவில் செயல் அலுவலர், சசிகலா, திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பொது விருந்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு உணவருந்தினர்.