தருமபுரி மாவட்ட கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம், கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக பி. தர்மசெல்வன் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.