செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கத்தில் அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக் கூட்டத்தை சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கீழ்மருவத்தூர் ஏ. பூபதி தலைமையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக அமைப்பு செயலாளர் என் முருகுமாறன், இவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தனபால், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செய்யூர் ஜி. ஜெயச்சந்திரன், காஞ்சிபுரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராஜசேகர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிரகாஷ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் என இந்த பொதுக்கூட்டத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.