செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பாதுகாப்பு மதில் சுவர்களில் தனியார் விளம்பரங்களை தவிர்க்கும் வகையில் செங்கல்பட்டு அரசு கலைக்கல்லூரி மற்றும் மாமல்லபுரம் அரசு சிற்பக் கலை கல்லூரி மாணவர்கள் சுவர்களில் ஓவியங்களும் விழிப்புணர்வு கருத்துக்கள் பதிந்த ஓவியங்களும் வரைந்து வருகின்றனர்.
ஓவிய ஆசிரியர்கள் ஓவிய கலைஞர்கள் என பல தரப்பினரும் இந்த ஓவியங்களை வரைந்த வண்ணம் தீட்டி வருகின்றனர். இதில், தமிழக அரசின் சாதனைகள் பெண்களின் சிறப்புகளை போற்றும் வகையிலும் இயற்கை காட்சிகளும் மக்கும் குப்பை மக்காத குப்பை போன்ற விழிப்புணர்வு ஓவியங்களும் வரையப்பட்டு வருகிறது. இதை அவ்வழியாக செல்லும் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர். இது போன்ற ஓவியங்கள் மூலமாக பலதரப்பட்ட மக்களின் எண்ணங்கள் மாற்றலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.