மதுராந்தகம் அருகே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மரகத தண்டாயுதபாணி முருகர் கோவிலில் 108 பால்குடம் மற்றும் காவடி எடுத்த பக்தர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் மலை குன்றத்தில் மரகத தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோவில் உள்ளது.
இன்று தைப்பூச திருவிழா என்பதால் மரகத தண்டாயுதபாணி முருகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தனது நேர்த்திக் கடனாக பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, 108 பால்குடம் எடுத்து கனக மாலையை சுற்றி வந்து சுற்றி வந்து முருகனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்பு மொட்டை அடித்தும் அலகு குத்தியும் முருக பக்தர்கள் மலையேறி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி முருக பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் முருகனை வழிபட்டனர். இத்த தைப்பூசத் திருநாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.