செங்கல்பட்டு: வாலிபரிடம் மொபைல்போன் திருட்டு

67பார்த்தது
செங்கல்பட்டு: வாலிபரிடம் மொபைல்போன் திருட்டு
செங்கல்பட்டு அடுத்த திருமணிக் கிராமத்தைச் சேர்ந்தவர் குருமூர்த்தி, 34. இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது, மொபைல்போனில் பேசியபடி சென்றபோது, பின்னால் 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், குருமூர்த்தியின் 'சாம்சங்' மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து குருமூர்த்தி அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி