தமிழ்நாட்டில் 2,153 போலீசார் பணியிட மாற்றம்
சென்னை டிஜிபி அலுவலகத்தில் வாரந்தோறும் காவலர் குறை தீர்க்கும் முகாம் நடந்து வருகிறது. இதில், டிஜிபி சங்கர் ஜிவாலிடம் மாவட்டம் விட்டு மாவட்டமும், மாநகரம் விட்டு மாநகரமும் பணியிட மாற்றம் கோரி காவலர்கள் பலர் மனு அளித்தனர். இந்நிலையில், தகுதியுடைவர்களை கண்டறிந்து, தமிழகம் முழுவதும் காவலர்கள், முதல் நிலைக் காவலர்கள், தலைமை காவலர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஆகிய நிலைகளில் பணிப்புரியும் 2,153 பேரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.