திருக்கோவிலூர் - Tirukoilur

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், தொட்டிக்குடிசை, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ப. துரைக்கண்ணு (69). இவா், திங்கள்கிழமை திருவெண்ணெய்நல்லூா்- திருக்கோவிலூா் சாலை, டி. எடையாா் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த பைக் அவா் மீது மோதியது. இதில், துரைக்கண்ணு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், பைக்கை ஓட்டி வந்த இதே பகுதியைச் சோ்ந்த காத்தவராயன் மகன் அருண்குமாா்(23) தலையில் பலத்த காயங்களுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வீடியோஸ்


விழுப்புரம்
அனுமதியின்றி அரசியல் கட்சி பேனர்கள் கண்டு கொள்ளாத போலீசார்
Sep 10, 2024, 17:09 IST/திண்டிவனம்
திண்டிவனம்

அனுமதியின்றி அரசியல் கட்சி பேனர்கள் கண்டு கொள்ளாத போலீசார்

Sep 10, 2024, 17:09 IST
திண்டிவனத்தில் போக்குவரத்து மிகுந்த மிக்கிய சாலைகள், தாலுகா அலுவலகம், காந்தி சிலை, பழைய கோர்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நகராட்சி மற்றும் போலீசாரின் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் நகராட்சி மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற்றபின் வைக்கப்படும் பேனர்கள், விழா நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவும், விழா நடந்து பிறகு மூன்று நாட்கள் என அனுமதி வழங்கப்பட்டது. தற்போது பல இடங்களில் அனுமதி பெறாமல் விழா முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும், பல பேனர்கள் அப்படியே நிலை கொண்டுள்ளது. திண்டிவனத்தில் ஏற்கனவே முன்விரோதம் காரணமாக அரசியல் கட்சிகளின் பேனர் சேதப்படுத்திய விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. அனுமதியில்லாமல் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவதில் திண்டிவனம் போலீசார் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகின்றனர்.