திருக்கோவிலூர் - Tirukoilur

குடும்ப தகராறு; 4 பேர் மீது வாக்குப்பதிவு

குடும்ப தகராறு; 4 பேர் மீது வாக்குப்பதிவு

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அய்யனார், (45) விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி ராஜிவ்காந்தி என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த 11ம் தேதி திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜிவ்காந்தி, மகாலிங்கம், பிரியங்கா, புஷ்பா ஆகிய நான்கு பேர் சேர்ந்து அய்யனாரை தாக்கியுள்ளனர். இது குறித்து அய்யனார் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் ராஜிவ்காந்தி, மகாலிங்கம், பிரியங்கா, புஷ்பா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து ராஜிவ்காந்தியை, (40); கைது செய்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்
அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
Sep 16, 2024, 01:09 IST/செஞ்சி
செஞ்சி

அகத்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Sep 16, 2024, 01:09 IST
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரஹன் நாயகி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பழைமையான இந்தக் கோயிலில் கடந்த செப்டம்பா் 12-ஆம்தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. 13-ஆம்தேதி காலை தனபூஜை, அஷ்டலட்சுமி ஹோமம் உள்ளிட்டவையும், 14-ஆம்தேதி 2-ஆம் கால யாக பூஜை, அஷ்டபந்த சமா்ப்பணம், பூா்ணாஹுதி, வேத ஆகம திருமறை பாராயணம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலை மூன்றாம் கால யாக பூஜை, நாடி சந்தனம் ஆகியவை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, யாத்ரா தானம் நடைபெற்றது. தொடா்ந்து, காலை 7 மணிக்கு யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடாகி விமான கோபுர கலசங்களுக்கும், அனைத்து மூலவ மூா்த்திகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 11 மணிக்கு மகா அபிஷேகமமும், அன்னதானம் மற்றும் சுவாமி திருக்கல்யாணம், திருவீதியுலா ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் சுமாா் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.