ரிஷிவந்தியம் - Rishivandiyam

கள்ளக்குறிச்சி: குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

கள்ளக்குறிச்சி: குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: இந்தாண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய கணக்கின்படி, 10 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு வரும் ஜூலை மாதம் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் வனக்காப்பாளர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், 11 மாதிரித்தேர்வுகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நடக்க உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் வரும், 19ம் தேதி காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. மேலும் மாதிரித்தேர்வுகள் வரும் 22ம் தேதி முதல் துவங்கி நடக்க உள்ளன.  தேர்வுகள் சேலம் மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வடிவமைக்கப்பட்ட வினாத்தாள்களை கொண்டு முழுப் பாடதிட்டத்திற்கும் நடத்தப்படும். பயிற்சி மற்றும் தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி