ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார், 9; அதே பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவரும், அவரது நண்பரான குமார் மகன் தங்கராஜ், 9; என்பவரும் அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கினார். சரத்குமாரை மீட்டு ரிஷிவந்தியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக கூறினர்.