சின்னசேலம் அடுத்த இந்திலியை சேர்ந்தவர் நாராயணி மகன் கொளஞ்சி, 60; விவசாய கூலித்தொழிலாளி.
மது போதைக்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 12: 00 மணியளவில் மது போதையில் வந்த கொளஞ்சியை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த
கொளஞ்சி வீட்டிற்கு பின்னால் இருந்த முள்வேலி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.