தியாகதுருவம்: அரசு வீடு கேட்டு மிரட்டல் விடுத்தவர் கைது

72பார்த்தது
தியாகதுருகம் அடுத்த மாடூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அன்பழகன்; 51. அவர் வீட்டிற்கு அருகே வசிப்பவர் முருகேசன்; 49. அவர் தனக்கு அரசு வீடு வேண்டும் என அன்பழகனிடம் கேட்டார். இது குறித்து, அவர் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்க சொன்னார். இதனால் முருகேசன் அன்பழகனை திட்டினார். இதுதொடர்பாக அவருக்கும் அன்பழகனின் அண்ணன் அண்ணாதுரைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், அண்ணாதுரையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.


இதுகுறித்த புகாரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து, முருகேசனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி