மூங்கில்துறைப்பட்டு, பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திரத் தேர் திருவிழாவையொட்டி, நேற்று காலை 10: 00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. பின்பு கோவிலில் மஞ்சள், அரிசி இடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதியம் 1: 00 மணிக்கு, பக்தர்கள் அலகு குத்தி, தேர் இழுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். அதேபோல, ரங்கப்பனூரில் நடந்த திருவிழாவிலும் மக்கள் தேரை இழுத்து வழிபாடு செய்தனர்.