ரிஷிவந்தியம்: முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்

84பார்த்தது
ரிஷிவந்தியம் அருகே சொத்து தகராறில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய, இருவர் கைது செய்யப்பட்டனர். 

வெங்கலத்தை சேர்ந்தவர் நீலகண்டன், (42); ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 11ஆம் தேதி இவரது வீட்டிற்கு அண்ணன் சாத்தகி, தனது மனைவி சரஸ்வதியுடன் வந்தார். இந்த இருவருடன், உறவினர்கள் பாரதி கிருஷ்ணன், (26); மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும் உடன் வந்தனர். அங்கு சொத்து விவகாரம் தொடர்பாக, நீலகண்டனுக்கும், சாத்தகிக்கும் இடையே பிரச்னை எழுந்தது. இதைத்தொடர்ந்து, சாத்தகிக்கு ஆதரவாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நீலகண்டனையும், அவரது மாமனார் கோதண்டராமனையும் தாக்கினர். 

இது குறித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் சாத்தகி மற்றும் சரஸ்வதி மீது வழக்குப்பதிந்தனர். மேலும், பாரதி கிருஷ்ணன், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி