தியாகதுருகம் அடுத்த பெரியமாம்பட்டை சேர்ந்த இளவரசு மகன் நிஷாந்த், 20; சின்னசேலம் பகுதி தனியார் பொறியியல் கல்லுாரியில், மெக்கானிக்கல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை 9: 00 மணிக்கு வீட்டில் உள்ள மின் மோட்டார் சுவிட்ச்சை நிறுத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் படி தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.