கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய வழக்கில் விசாரிக்க அனுமதி

68பார்த்தது
கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வேப்பூர் அடுத்த நிராமணியை சேர்ந்த தங்கராசு, 70; கடந்த 2024ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன்பு இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை மற்றும் ரத்த மாதிரி ஆய்வக பரிசோதனையில், தங்கராசு கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தது தெரிய வந்தது. அதையடுத்து, கள்ளச்சாராய பலி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கருணாபுரத்தை சேர்ந்த கண்ணுக்குட்டி(எ) கோவிந்தராஜ், 48 உள்ளிட்ட 4 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


கைதான 4 பேர் அளித்த தகவலின் பேரில், இதே வழக்கில் கடலுார் மத்திய சிறையில் உள்ள கதிரவன், 30; ஜோசப், 40, சின்னதுரை, 36; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, கள்ளக்குறிச்சி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.


மூரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு டி. எஸ். பி. , தேவராஜ் மனு அளித்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஹரிஹரசுதன் 3 பேரையும் 5 நாட்கள் (வரும் 22ம் தேதி வரை) காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி