மணலூர்பேட்டை: பைக் மீது கார் மோதல் வாலிபர் பலி

60பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், விருதுவிலங்கினான் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் ராஜமுத்து, 28; நேற்று மாலை திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையில் பைக்கில் சென்றார். அத்திப்பாக்கம், காட்டுக்கோவில் அருகே விருதுவிலங்கினான் செல்ல திரும்பியபோது திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலுார் நோக்கி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் ராஜமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். கார் சென்டர் மீடியனில் மோதி சாலையின் மறுபக்கத்தில் விழுந்தது. இதனால் இரு பக்கமும் போக்குவரத்து பாதித்தது.


இதையடுத்து, வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


விபத்து குறித்து மணலுார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி