ரிஷிவந்தியம் - Rishivandiyam

ரிஷிவந்தியம்: அரங்கநாத பெருமாள் கோயிலில் பாலாலயம்

ரிஷிவந்தியம்: அரங்கநாத பெருமாள் கோயிலில் பாலாலயம்

வாணாபுரம் அடுத்த ஆதிதிருவரங்கத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் சுற்றுச்சுவர், கோபுரம், நெற்களஞ்சியம் ஆகியவை பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூலவர் ரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள், கோதண்டராமர், லட்சுமணர், சீதாபிராட்டி சுவாமி சன்னதிகளை பாலாலயம் செய்வதற்கான பூஜை நேற்று நடந்தது. இதற்காக, யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.  ரங்கநாத பட்டாட்சியர் தலைமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர். பாலாலயம் செய்யப்பட்டதால் பக்தர்கள் மூலவர் சன்னதிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய முடியாது. அதற்கு மாறாக, கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் உற்சவர் மண்டபத்தில், உற்சவர் ரங்கநாயகி தாயார், அரங்கநாத பெருமாள் சுவாமிகள் எழுந்தருளி செய்யப்பட்டுள்ளனர். சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் உற்சவர் சுவாமிகளை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடந்ததும் மீண்டும் மூலவர் சுவாமியை தரிசனம் செய்யலாம்.

வீடியோஸ்


கள்ளக்குறிச்சி
Apr 02, 2025, 03:04 IST/உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை: குளவி கொட்டியதால் மூன்று பேர் காயம்

Apr 02, 2025, 03:04 IST
உளுந்துார்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர்கள் லட்சுமி நாராயணன் மனைவி பொன்னி 36; கிருஷ்ணமூர்த்தி மனைவி சித்ரா, 30; சக்திவேல் மனைவி பத்மா, 20; இந்த மூன்று பேரும் நேற்று காலை 10: 00 மணியளவில் வயல்வெளிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் குளவிகள், மூன்று பேரையும் துரத்தி துரத்தி கடித்தது. இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.