சின்னசேலம்: பைக்குகள் மோதல்: வாலிபர் பலி

84பார்த்தது
சின்னசேலம் அடுத்த வி. பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 35; இவர், நேற்று மாலை தனது பைக்கில் சின்னசேலம் நோக்கி கூகையூர் சாலையில் உள்ள தனியார் ரைஸ் மில் அருகே சென்றார். அப்போது, கடலுார் மாவட்டம், வேப்பூரை சேர்ந்த வேலுசாமி, 34; என்பவர் ஓட்டி வந்த பைக், சண்முகம் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த சண்முகம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வேலுசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி