கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் அடுத்த அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம், இவர் அவினாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பும் பொழுது கல்லுமடை பேருந்து நிறுத்தம் அருகில் வரும்போது திங்களூர் பகுதியைச் சேர்ந்த திருமலைசாமி என்பவர் தனது காரில் செவியூர் நோக்கி சென்றுள்ளார்
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த ஆம்னி மீது வேகமாக மோதியது, இந்த விபத்தில் சுந்தரம் ஓட்டி வந்த ஆம்னி காரில் பயணம் மேற்கொண்ட ஏழு பேர் படுகாயம் அடைந்தனர்
இதில் ஆம்னி காரை ஓட்டி வந்த சுந்தரம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் , காரில் பயணம் செய்த 7பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
இந்த நிலையில் இறந்து போன சுந்தரத்தின் உடல் கோபி அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. நேற்று நள்ளிரவு சுந்தரம் உயிரிழந்த நிலையில் இதுவரை சுந்தரத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கோபி - சக்தி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், அதனைத் தொடர்ந்து அங்கு வந்த கோபி காவல் துறையினர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு இன்று இரவுக்குள் உடற்கூறு செய்து உடலை ஒப்படைப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.