உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய வாலிபால் பரபரப்பு

82பார்த்தது
டி. என். பாளையத்தில் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய வாலிபால் பரபரப்பு
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி. என். பாளையம், தனியார் கல்லூரி அருகே 60 அடி உயர உயர் அழுத்த மின் கோபுரம் உள்ளது. நேற்று மதியம் அந்த மின் கோபு ரத்தில் திடீரென ஒரு நபர் ஏறினார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அதிகாரி ரங்கராஜன் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பங்களாப்புதூர் போலி

சார் அங்கு சென்றனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர் கள் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி அந்த நபரை மீட்டு பத்திரமாக கீழே கொண்டு வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கோபியை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி (வயது 33) என்பதும், கடந்த 1 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர், தன்னை யாரோ தூத்துவதாக கூறி உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறியதும், தெரியவந்தது. இதனிடையே கருப்புசாமியின் குடும் பத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து கருப்புசாமியை தீயணைப்பு வீரர்கள் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி