ஈரோடு: ரூ. 8.50 கோடி.. காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்த ஸ்டாலின்

50பார்த்தது
ரூ. 8.50 கோடியில் நவீன சுகாதார வளாகம், திருமண மண்டபத்துக்காக அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார். பக்தர்கள் வசதிக்காக கோயிலில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ரூ.3.85 கோடியில் கோயில் வளாகத்தில் திருமண மண்டபம் புனரமைத்தல் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டும் பணி, ரூ.4.65 கோடியில் கோயில் வளாகத்தில் 3 இடங்களில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணிக்கான அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு சட்டப் பேரவையில் வெளியிட்டார். இந்நிலையில், அந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். 

இதைத் தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற பூமிபூஜையில் ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி, கோயில் துணை ஆணையர் மேனகா, ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சுகுமார், பரம்பரை அறங்காவலர்கள் புருசோத்தமன், அமுதா, கண்காணிப்பாளர்கள் சங்கர், யோகலட்சுமி, கொங்கஹள்ளி மல்லிகார்ஜுன சுவாமி கோயில் செயல் அலுவலர் அசோக்குமார், சத்தியமங்கலம் சரக ஆய்வாளர் சங்கரகோமதி, அந்தியூர் சரக ஆய்வாளர் சிவமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி