இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா தனது மனைவி கோகிலாவுடன் கேரளாவில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது முன்னாள் மனைவிகள் மீது புகார் கொடுத்துள்ளார். "எனது இரண்டாவது மனைவியான பாடகி அம்ருதா சுரேஷும், மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத்தும் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி அவதூறு பரப்புகின்றனர். அஜு அலெக்ஸ் என்கிற யூடியூபர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்" என்றார்.