ஈரோடு: சென்னிமலையை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி கணேசன் (48). ஞாயிற்றுக்கிழமை இரவு டாஸ்மாக் கடையில் தனது நண்பர்கள் 2 பேருடன் கணேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்லவில்லை என தெரிகிறது. நேற்று காலை வாரச்சந்தைக்குள் ரத்த காயங்களுடன் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அங்கு விரைந்த போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். குடிபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.