ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி வட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கேர்மாளம் வனப்பகுதியில் அமைந்துள்ள மலைகிராமங்களில் குடிநீர் வசதி இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கேர்மாளம் ஊராட்சியில் மின் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கேர்மாளம் ஊராட்சி நிர்வாகம் மலைகிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.