3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின் போது மத்திய அமைச்சர்கள் பலரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மார்ச் 20ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். ரூ.1,000 கோடி டாஸ்மாக் முறைகேடு, மும்மொழிக்கொள்கை, இந்தி விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசிப்பார் என கூறப்படுகிறது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் ஆளுநர் டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.