கோபி அருகே கணக்கம்பாளையத்தில் வள்ளி கும்மி ஆட்டம்

58பார்த்தது
கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் காமாட்சி அம்மன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை (02.02.2025) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த 19ஆம் தேதியில் யாகசாலை முகூர்த்தக்காலம் நடுதல் நிகழ்வுடன் விழா தொடங்கியது. 24ஆம் தேதியில் யாகசாலையிலும், ஊர் பொதுமக்கள் இல்லங்களிலும் முளைப்பாரி இடுதலும், நேற்று முன்தினம் காலை மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்று பின்னர் பவானி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை கணக்கம்பாளையம் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இருந்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு அரிசி கூடை மற்றும் முளைப்பாரியை பெண்கள் எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு முப்பெரும் தேவிக்கு முதல் கால பூஜை நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து இன்று காலை அம்பிகைக்கு இரண்டாம் கால பூஜை, விசேஷசந்தி, மண்டப பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, விமான கோபுரம் கலசங்கள் பிரதிஷ்டையும், விநாயகர் முதல் பரிவார தெய்வங்களுக்கு யந்திரஸ்தாபனம் செய்து பிரதிஷ்டை செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இன்று மாலை கணக்கம்பாளையத்தை சேர்ந்த காமாட்சி அம்மன் வள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடைபெற்றது. அதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஆடினர்.

தொடர்புடைய செய்தி