கோபி அருகே மொடச்சூரில் வீட்டில் தீ விபத்து..

60பார்த்தது
கோபி அருகே உள்ள மொடச்சூரை சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் தனுஷ்(21). செல்வக்குமாரின் பெற்றோர் இறந்து விட்ட நிலையில் அண்ணன் ராகுலுடன் பாட்டி கண்ணம்மாள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ராகுல் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் அவரது பாட்டி கண்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். வீட்டின் படுக்கையறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

படுக்கையறையில் துணி, உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. வீட்டின் மேற்கூரை மற்றும் ஓடுகளால் அமைக்கப்பட்டு இருந்ததால் தீ வேகமாக பரவியது. இதில் படுக்கையறையில் இருந்த பீரோ, கட்டில், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், தனுசின் பெற்றோர்களது இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்து ஏற்பட்ட உடனே அருகில் உள்ள நூல் மில் தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டதால் தீ பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோபி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி