கோபியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.

81பார்த்தது
சென்னையில் இன்று மாலை நடைபெறும் சாணக்யா இணைய நிறுவன விழாவில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பங்கேற்க கூடாது என திராவிடர் கழகம் சார்பில் கோபியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு.


சென்னையில் இன்று மாலை நடைபெறும் சாணக்யா இணைய நிறுவன விழாவில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கோபி பகுதி முழுவதும், 50 ஆண்டுகள் பதவியும், பலனும் பெற்று இனப்பகைவர்களுடன் கூட்டணி அமைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று தொகுதி மக்கள் சார்பில் அன்புடன் கோருவதாக கச்சேரி மேடு, தினசரி மார்க்கெட், சிக்னல், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி