சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த அருண் (25) மற்றும் படப்பை சுரேஷ் ஆகிய 2 ரவுடிகள் நேற்று முன்தினம் (மார்ச். 16) வெட்டிக் கொல்லப்பட்டனர். முன்விரோதம் காரணமாக நடந்த கொலையில் சுக்கு காபி சுரேஷ் என்கிற சுரேஷ் (25) கைது செய்யப்பட்டார். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் அடைத்து வைத்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.