ஈரோடு நகரம் - Erode City

ஈரோடு மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு பணி

ஈரோடு மாநகராட்சி சார்பில் டெங்கு தடுப்பு பணி

ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடுதலாக 4 மண்டலங்களிலும் தலா 30 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு மாநகராட்சியில் டெங்கு தடுப்பு 350 கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினந்தோறும் ஒரு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு 50 வீடு என்ற வீதத்தில் 4 மண்டலங்களிலும் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகதார பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளைத் துரிதப்படுத்த 4 மண்டலங்களில் தலா 30 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பணியாளர்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా