தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் கட்டுமான தொழிலாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள மாவட்ட தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்றத் தன்னாட்சி அதிகாரத்தை வாரியத்திற்கு வழங்க வேண்டும், நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும், ஓய்வூதியமாக மாதம் 2000 ரூபாய் வழங்க வேண்டும், வீட்டு வசதி திட்டத்தைத் துவங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் திட்டங்களை நிறைவேற்றாத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிமாநில தொழிலாளர் வருகை வரம்பினை கட்டுப்படுத்தி 80 சதவீதம் வேலைகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கு கட்டாயம் வழங்கும் வகையில் தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும், வேலை செய்யும் இடத்தில் நிகழும் விபத்தில் மரணம் அடையும் மற்றும் ஊனமுடையும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு சட்டப்படி முழு இழப்பீடு வழங்க வேண்டும். , உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.