ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தில் வி. சி. க. , வுக்கு உடன்பாடில்லை '': திருமாவளவன் பேட்டி
ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
" மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' கொள்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இத்திட்டம் ஏதோ உள் நோக்கத்தோடு கொண்டு வரப்படுவதாக ஐயப்படுகிறோம். அதிபர் ஆட்சி முறைக்கு வழிவகுத்தது விடும் என்ற அச்சம் ஏற்படுகிறது. ஒருமித்த கருத்து உள்ள இயக்கங்களோடு இணைந்து இந்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிராக மேலும் வலுவாக குரல் கொடுப்போம்" என்றார்.