தீரன் சின்னமலை சிலைக்கு
அமைச்சர் முத்துசாமி மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 வது நினைவு ஆடிப் பெருக்கு விழாவையொட்டி இன்று, அறச்சலூர் பேரூராட்சி ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரன், வெங்கடாசலம் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மேயர் நாகரத்தினம் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்